உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓவியம்பாளையம் தொடக்க பள்ளியில் அமைச்சர் ஆய்வு

ஓவியம்பாளையம் தொடக்க பள்ளியில் அமைச்சர் ஆய்வு

நாமக்கல்: ஓவியம்பாளையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ், ப.வேலுார் அடுத்த ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். காலை, 8:00 மணிக்கே பள்ளிக்குள் நுழைந்த அமைச்சர், காலை உணவு உட்கொண்டிருந்த மாணவர்களுடன் உரையாடினார்.ஆசிரியர்கள் யாரும் அந்நேரத்தில் வராததால், தனி ஆளாக பள்ளி முழுவதும் சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் தனராசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ரவி செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை