உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிராமத்தில் மார்கழி பஜனை

கிராமத்தில் மார்கழி பஜனை

ராசிபுரம், டிச. 27-தமிழ் மாதத்தில், மார்கழி மாதம் ஆன்மிகத்திற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதுமட்டுமின்றி கிராமங்களில் உள்ள அனைத்து கோவில்களிலும், மார்கழி மாதம் அதிகாலை சிறப்பு பூஜை நடக்கிறது.நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதியில், பூசாரிகள் அதிகாலை தெருக்களில் சங்கு ஊதிக்கொண்டு செல்வதை வழக்கமாக உள்ளனர். ராசிபுரம் அடுத்த கடந்தப்பட்டியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் சுவாமி பஜனை பாடல்களை பாடி செல்கின்றனர். முக்கியமாக பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பஜனையில் கலந்து கொள்கின்றனர். இசை வாத்தியங்களுடன் தினமும், 30க்கும் மேற்பட்டோர் பஜனை பாடல்களை பாடிக்கொண்டு கிராமத்தை சுற்றிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி