உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சுங்கச்சாவடியை அகற்ற எம்.பி., கோரிக்கை மனு

சுங்கச்சாவடியை அகற்ற எம்.பி., கோரிக்கை மனு

நாமக்கல்: 'நாமக்கல் மாநகராட்சிக்கு அருகே உள்ள சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு மனு அனுப்பி உள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கீரம்பூர் ராசாம்பாளையத்தில் உள்ள சுங்கச்சாவடி, நாமக்கல் மாநகராட்சி எல்லையில் இருந்து, 5 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது என, எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள்படி, நான் அறிந்த வகையில் எந்த அனுமதியும் வழங்கவில்லை. போக்குவரத்து தொழிலுக்கு பெயர் பெற்றது நாமக்கல் என்பதால், உள்ளூர் மக்களுக்கும், லாரி உரிமையார்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.அதனால், சுங்கச்சாவடியை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாதாந்திர சீட்டு வழங்கப்பட்டாலும், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, எதிர்காலத்தில் நகர எல்லைக்குள் சுங்கச்சாவடிகள் அமைக்க வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ