உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முருக பக்தர்கள் மாநாடு பா.ஜ.,ஆலோசனை கூட்டம்

முருக பக்தர்கள் மாநாடு பா.ஜ.,ஆலோசனை கூட்டம்

நாமகிரிப்பேட்டை மதுரையில் நடக்கவுள்ள, முருக பக்தர்கள் மாநாடு குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். மதுரையில் ஜூன், 22 அன்று முருகர் பக்தர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நாமகிரிப்பேட்டையில் நடந்தது. ஒன்றிய தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர்கள், ஒன்றிய துணைத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநாட்டில் அதிகளவு முருக பக்தர்கள் கலந்து கொள்வது, வாகன ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை