அரவக்குறிச்சியில் மர்ம சத்தம் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
அரவக்குறிச்சி :அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை, 11:00 மணியளவில் திடீரென மர்ம சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஈசநத்தம், சின்ன தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை, 11:00 மணியளவில் திடீரென மர்ம சத்தம் கேட்டது. இரண்டு வினாடி வரை அந்த சத்தம் தொடர்ந்ததாக, அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். என்ன சத்தம் என்பது புரியாமல் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதேபோன்று, 9 மாதங்களுக்கு முன்பும் மர்ம சத்தம் கேட்டதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.பாறை வெடிப்பு சத்தமாக இருக்குமா என கேட்டபோது, அந்த பகுதியில் பாறை வெடிப்பு எதுவும் நடைபெறவில்லை. மேலும், அந்த சத்தம் வழக்கமான பாறை வெடிப்பு சத்தத்திலிருந்து வித்தியாசமாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மர்ம சத்தம் குறித்து, பொதுமக்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பி வரும் நிலையில், இதற்கான உண்மையான காரணம் குறித்து, மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற் கொள்ள வேண்டும்.