உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உலக சாதனை புத்தகத்தில் நாமக்கல் சிறுவன்

உலக சாதனை புத்தகத்தில் நாமக்கல் சிறுவன்

நாமக்கல்:முழங்கால் சுழற்சி முறையில், ஒரு நிமிடத்திற்கு, 118 முறை சிலம்பம் சுழற்றி சாதனை படைத்த நாமக்கல் சிறுவன், சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். நாமக்கல் காமராஜர் ந கரைச் சேர்ந்த ராஜ்குமார், திவ்யா தம்பதியின் மகன் தேவசிவபாலன், 11. இவர், 6 வயது முதல், நாமக்கல் ஏகலைவா கலைக்கூடத்தில், சிலம்பம் கற்று வருகிறார். தொடர்ந்து, அலங்கார சிலம்ப பாடத்தில், முழங்கால் சுற்று பயிற்சியை மேற்கொண்டார். 'ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' நிறுவனர் டிராகன் ஜெட்லி முன்னிலையில், கடந்த ஜன., 25ல், நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், சிலம்பு கம்பை தன் இரு முழங்கால்களுக்கு இடையே, ஒரு நிமிடத்திற்கு, 118 முறை சுழற்றி சாதனை ப டைத்தார். இவரது இந்த சாதனை, உலக சாதனை புத்தக நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது, உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு, மாணவருக்கு, கடந்த 28ல், லண்டனில் இருந்து சான்றிதழ் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை