உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் அரசு கலை கல்லுாரியில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

நாமக்கல் அரசு கலை கல்லுாரியில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

மோகனுார், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர்(பொ) ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தார். கல்லுாரி தாவரவியல் துறை தலைவர் ராஜேஸ்வரி, மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்றிதழ் வழங்கி பேசியதாவது:மாணவர்கள் வாழ்க்கை பாதையில், 'முயற்சி, முயற்சி' என, சிறு நடையை போட்டு, வெற்றிப்பாதையாக மாற்ற வேண்டும். வாழ்க்கையில் பொறுமை, விடாமுயற்சி, ஈடுபாடு ஆகியவற்றுடன் முயற்சி எடுக்கும் தருணத்தில், நீங்கள் விரும்பியதை அடையலாம். சவால்கள் வாழ்க்கையை அழகாக்குகின்றன. சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன. சோதனைகளை சாதனையாக்குங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, இளநிலை யில், 254 பேர், முதுநிலை யில், 105 பேர் என, மொத்தம், 359 மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ