தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி, பட்டாசு விற்பனையால் களைகட்டிய நாமக்கல்
நாமக்கல்: இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜவுளி, பட்டாசு விற்பனை சூடுபிடித்ததால், நேற்று நாமக்கல் நகரம் மக்கள் வெள்ளத்தில் களைகட்டியது.இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டா-டப்படும் பண்டிகைகளில், தீபாவளி முக்கிய பண்-டிகையாக உள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்-டிகை, இன்று கொண்டாடப்பட உள்ளது. பொது-வாக தீபாவளிக்கு சில வாரங்கள் முன்னதாகவே துணிகள், பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்-கிவிடும். நாமக்கல் நகரில் கடைவீதி, சேலம் சாலையில், ஏராளமான ஜவுளி கடைகள் உள்-ளன. இங்கு, தீபாவளி பண்டிகையையொட்டி, பல்வேறு புதிய ரகங்கள் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.இன்று தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதைய-டுத்து, கடைசி நாளான நேற்று, நாமக்கல் நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.அதற்கேற்ப, ஜவுளி நிறுவனங்கள், நகை கடை-களில், துணிமணிகள் மற்றும் நகைகள் வாங்கு-வதற்காக மக்கள் படையெடுத்தனர்.தங்கள் குடும்பத்திற்கு தேவையான ஜவுளி ரகங்-களை வாங்கிக் கொண்டு, இரு கைகளிலும் அவற்றை எடுத்துக்கொண்டு குதுாகலமாக சென்-றனர். மக்கள் படையெடுப்பு காரணமாக, ஜவுளி விற்பனையும் சூடுபிடித்தது. மேலும், பட்டாசு கடைகளிலும், மக்கள் சென்று, குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை வெடிக்கும் பல்வேறு ரகங்களை வாங்கி சென்றனர். குறிப்பாக, 'கிப்ட் பாக்ஸ்'களை அதிகளவில் வாங்கி செல்வதை காணமுடிந்தது.