உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்தின் 53வது நினைவு நாள் அனுசரிப்பு

நாமக்கல் கவிஞர் ராமலிங்கத்தின் 53வது நினைவு நாள் அனுசரிப்பு

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நுாலக வாசகர் வட்டம் மற்றும் நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பில், கவிஞர் ராமலிங்கத்தின், 53வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நுாலகர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் சார்பில், கவிஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. வள்ளலார் சன்மார்க்க சங்க பொறுப்பாளர் சபாபதி, நம்மாழ்வார் நடுநிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன், முன்னாள் ராணுவ அதிகாரி சுப்பிரமணி, இன்ஜினியர் மணி, வாசகர் வட்ட தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அதேபோல், நாமக்கல்-திருச்சி சாலையில் செயல்படும் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி வளாகத்தில் உள்ள கவிஞர் ராமலிங்கம் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை