மேலும் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 'லோக் அதாலத்'
13-Jun-2025
நாமக்கல், தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுப்படியும், நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி அறிவுறுத்தல்படியும், நேற்று நடந்தது.இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதலாவது அமர்வில், நீதிபதிகள் பிரபாசந்திரன், விஜயகுமார், ரூபனா, இரண்டாவது அமர்வில், நீதிபதிகள் சாந்தி, சச்சிதானந்தம், தங்கமணி ஆகியோர் வழக்குகளை விசாரணை நடத்தினர்.நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தை, சார்பு நீதிபதி வேலுமயில் மேற்பார்வையிட்டார்.அதில், விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை, குடும்ப நலன், ஜீவனாம்சம், தொழிலாளர் நலன், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் வென்றவர், தோற்றவர் என்ற வேறுபாடு இருக்காது.நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, குமாரபாளையம், சேந்தமங்கலம் ஆகிய நீதிமன்றங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 3,131 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 1,005 வழக்குகளுக்கு, ஏழு கோடியே, இரண்டு லட்சத்து, 20,206 ரூபாய் தீர்வு காணப்பட்டது.
13-Jun-2025