மேலும் செய்திகள்
பா.ஜ., கருத்தரங்கம்
29-Jun-2025
திருச்செங்கோடு, திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மருந்தியல் கல்லுாரியில், சுகாதார பொருளாதார விளைவு ஆராய்ச்சி மற்றும் வளரும் சுகாதார விளைவுகளுக்காக, 'கல்வித்துறை மருத்துவ கூட்டாண்மைகளை ஒருங்கிணைத்தல்' என்ற தலைப்பில், தேசிய கருத்தரங்கம் நடந்தது.விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். டிரஸ்டி கிருஷ்ணவேணி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். முதல்வர் முருகானந்தன் வரவேற்றார். விவேகானந்தா சிறப்பு மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், ராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணை தாளாளர் கிருபாநிதி, இயக்குனர் நிவேதனாகிருபாநிதி, நிர்வாக முதன்மை அதிகாரி சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் ஞானசந்திரன், அஞ்சன்குமார், ஹிதேபருச்சா, பிரியங்க் திரிபாதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு பயிற்சிகள், திறன் மேம்பாடு, மருந்தாராய்ச்சியில் பார்மசி மாணவியின் பங்களிப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து பேசினர்.கருத்தரங்கில், 63க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், 119க்கும் மேற்பட்ட நோயாளிகளின் தகவல் படிவம், 36க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆலோசனை படிவம் வழங்கப்பட்டு சிறந்த படிவத்திற்கு பரிசு வழங்கப்பட்டன. பாராமெடிக்கல் கல்லுாரியின் இயக்குனர் கோகுலநாதன், துறைத் தலைவர் சுபாஷனி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
29-Jun-2025