மேலும் செய்திகள்
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
24-Jun-2025
குபேரா - டிரைலர்
16-Jun-2025
நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, 'நெக்' (என்.இ.சி.சி.,) கோழிப்பண்ணையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, நாமக்கல் மண்டல, 'நெக்' மூலம் தினசரி கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை அறிவிக்கப்படுகிறது. இதை பண்ணையாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட புதன்சந்தை பகுதி பண்ணையாளர்களுக்காக, புதன்சந்தையில் வட்டார, 'நெக்' அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு, வட்டார தலைவர் பிரபு தலைமை வகித்தார். மண்டல பொருளாளர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தார். நாமக்கல் மண்டல தலைவர் சிங்கராஜ், வட்டார அலுவலகத்தை திறந்து வைத்தார். என்.இ.சி.சி., நிர்வாகிகள் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
24-Jun-2025
16-Jun-2025