கருங்கல்பட்டியில் புதிய கிளை அஞ்சலகம் திறப்பு
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் அருகே கருங்கல்பட்டி அக்ரஹாரம் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கிளை அஞ்சலக கட்டடத்தை, நேற்று திருச்செங்கோடு உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் ரமேஷ் திறந்து வைத்தார்.இதையடுத்து அஞ்சலக சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டமான செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொன்மகன் பொது வைப்பு நிதி முதலான சேமிப்பு திட்டங்களை பற்றியும், அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டங்களைப் பற்றியும் பொதுமக்களிடம் விளக்கினார். கருங்கல்பட்டி அக்ரஹாரம் கிராமம் மட்டுமன்றி அண்ணாநகர், சோமணம்பட்டி, கட்டிப்பாளையம், மேட்டுத்தெரு முதலான பல கிராமங்களின் அஞ்சல் சேவைகள் தடையின்றி, நிரந்தரமாக பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகுக்கும். கருங்கல்பட்டி கிளை அஞ்சலகத் தலைவர் தர்னிஷ்குமார், உதவி கிளை அஞ்சல் அலுவலர் கவிதா, ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.