உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேதமடைந்ததை அகற்றி புதிய மின் கம்பம் அமைப்பு

சேதமடைந்ததை அகற்றி புதிய மின் கம்பம் அமைப்பு

பள்ளிப்பாளையம், வசந்தநகர் பகுதியில், சேதமடைந்திருந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய கம்பம் அமைக்கப்பட்டது.பள்ளிப்பாளையம் அருகே, வசந்தநகர் பகுதியில் சாலையோரத்தில் மின் கம்பங்கள் உள்ளன. உயர் அழுத்த மின்சாரம் செல்லும் இந்த மின்கம்பங்களில், பெரும்பாலானவை சேதமடைந்துள்ளது. மின் கம்பத்தில் சிமென்ட்கள் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கிறது. ரோட்டின் ஓரத்திலும் இருப்பதால் வாகனங்கள் செல்லும்போது, எதிர்பாராத விதமாக உரசினாலே கீழே விழும் அபாயம் இருந்தது.இந்நிலையில், மின்வாரிய பணியாளர்கள், சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி, பொக்லைன் மூலம் புதிய மின் கம்பம் அமைத்தனர். இதனால் அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை