மேலும் செய்திகள்
வடமாநில தொழிலாளி நெஞ்சு வலியால் பலி
23-Sep-2024
குமாரபாளையம்: குமாரபாளையம் காவேரி நகர், புத்துக்கண் வீதியில் வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பவிந்தர் என்பவர் ஆட்களை வைத்து கட்டட வேலைகளை செய்து வருகிறார். இதில், மகாராஜ் ஹஞ் பகுதியை சேர்ந்த ராம்வம்சன் விஷ்வகர்மா, 59, என்ற தச்சு தொழிலாளி, கதவு இழைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக மிஷினில் சிக்கியதில் கை முதல் கால் வரை ஒரு பகுதி சிதைந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த பணியாளர்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Sep-2024