உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலரில் இருந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி

டூவீலரில் இருந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி

பள்ளிப்பாளையம் :பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனுஷ் மண்டல், 37, கிஷன்குமார், 22, அமித்குமார், 20, ஆகிய மூவரும், பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் தங்கி, கிடைக்கும் வேலைகளை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, மூவரும் டூவீலரில் பாப்பம்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள வளைவு பகுதியில் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில், அமித்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற இருவரும், லேசான காயமடைந்தனர். இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை