உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் மாவட்டத்தில் ஸ்வீட்ஸ் நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் ஸ்வீட்ஸ் நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்: தீபாவளி பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் இனிப்பு, பலகாரம் தயாரிப்பு நிறு-வனங்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகா-ரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.தீபாவளி பண்டிகை வரும், 31ம் தேதி கொண்டா-டப்படுகிறது. இதையொட்டி மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட இனிப்பு கடைகளில், பலவ-கையான இனிப்பு வகைகள், கார வகைகள் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், தனியார் மண்டபங்களில் இனிப்பு வகைகள் தயார் செய்ய அனுமதி கோரி, 18 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்-பட்டுள்ளன.இந்நிலையில் தரமான இனிப்பு வகைகள் தயார் செய்யப்படுகிறதா என்பதை, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட இடங்களில் நேற்று நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலு-வலர் அருண் கூறியதாவது: இனிப்பு, பலகார வகைகள் தயாரிக்கும்போது, தரமற்ற பொருள்-களை பயன்படுத்தக் கூடாது. ஒருமுறை பயன்ப-டுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் உபயோ-கிக்க கூடாது. அதில் ஹைட்ரோகார்பன் அதிகம் காணப்படும். அவற்றை பயோடீசல் தயாரிப்புக்-காக வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக்கூடாது. பல-காரங்கள் விற்கப்படும் பொட்டலங்களின் மீது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி கண்டிப்பாக அச்சிடப்பட வேண்டும். உணவு பாதுகாப்பு அலு-வலகத்தில் உரிமம் பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை