ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து
ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துகுமாரபாளையம், டிச. 2- கோவை, தொண்டாமுத்துார் பகுதியில் இருந்து திருப்பதி நோக்கி, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இதில், 26 பயணிகள் இருந்தனர். பஸ்சை, கோபியை சேர்ந்த யோகேஸ்வரன் ஓட்டினார். நாமக்கல் - குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த, 26 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால், 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.