உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

ராசிபுரம், ராசிபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்துல்சலாம் மகன் அஸ்பாக்,41. இவர், சேலம் சாலையில் யு.பி.எஸ்., விற்பனை மற்றும் சர்வீஸ் மையம் நடத்தி வந்தார். நாமக்கல் ரோடு, பாரதி தியேட்டர் எதிரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் உள்ள யு.பி.எஸ்., கடந்த சில தினங்களுக்கு முன் பழுதானது. இதை சரிசெய்த அஸ்பாக் நேற்று மீண்டும் பொருத்த சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அஸ்பாக் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அஸ்பாக் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை