ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
ராசிபுரம்: நகராட்சியுடன் அணைப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளை, இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ராசிபுரம் நகராட்சி தரம் உயர்த்துவதற்காக அணைப்பாளையம், முத்துக்காளிப்பட்டி உள்ளிட்ட, 5 ஊராட்சிகளை இணைக்க அர-சுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ராசிபுரம் பஸ்நிலைய மீட்பு குழு ஒருங்கிணைப்-பாளர் ஜோதிபாசு, தமிழக முதல்வர் மற்றும் நகராட்சி இயக்-குனர், கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:ராசிபுரம் நகராட்சியுடன் இணைந்து வளர்ந்து வரும் கட்டனாச்-சம்பட்டி, புதுப்பாளையம், குருக்கபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்காமல், விவசாயத்தை மட்டுமே முதன்மை தொழிலாக கொண்டுள்ள அணைப்பாளையம், கவுண்டம்பாளையம், முத்துக்-காளிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்-துள்ளனர். இது குறித்து நகராட்சி மன்றத்திலும், பொதுமக்களி-டமும் எவ்வித கலந்துரையாடலும் நடத்தவில்லை.பஸ்நிலையத்தை மாற்றுவதற்காகவும், ரியல் எஸ்டேட் உரிமை-யாளர்கள் பயன்பெறவே இது போன்று கருத்துரு தயாரித்துள்-ளனர். இதனால் ராசிபுரம் நகராட்சி, 25 ஆண்டு பின்னோக்கி செல்வதுடன் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். எனவே, நகராட்சி-யுடன் இணைக்கும் ஊராட்சிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.