உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாபாவில் மது அருந்தஅனுமதித்த ஓனர் கைது

தாபாவில் மது அருந்தஅனுமதித்த ஓனர் கைது

ப.வேலுார்:ப.வேலுார் பழைய பைபாஸ் சாலை, வெட்டுக்காட்டுபுதுாரில் தனியார் தபா ஓட்டல் உள்ளது. இங்கு குடில் அமைத்து வாடிக்கையாளர்களை அனுமதியின்றி மது அருந்த அனுமதி அளிப்பதாக புகார் எழுந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு, தாபா ஓட்டலில், ப.வேலுார் எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கு அமைக்கப்பட்ட குடிலில் வாடிக்கையாளர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். தாபா ஓட்டலில் அனுமதியின்றி மது அருந்த அனுமதி அளித்ததாக, தாபா ஓட்டல் உரிமையாளரான, ப.வேலுாரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் யுவராஜ், 27, என்பவரை, ப.வேலுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை