மேலும் செய்திகள்
கணினி திருட்டால் கட்டண ரசீது சிக்கல்
17-Jul-2025
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் ஊராட்சி அலுவலகத்தில், 79வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஊராட்சி எழுத்தர் வினோத், அனைத்துக்கட்சி நிர்வாகிகளையும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், உள்ளூர் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, நேற்று காலை, 8:30 மணி முதல், 9:00 மணிக்குள் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அழைப்பு விடுத்திருந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த, தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து, 8:30 மணிக்கு வந்தார். அவர் வந்ததும் ஊராட்சி எழுத்தர் வினோத் தேசியக்கொடி ஏற்றினார். அருகில், ஆங்காங்கே நின்று கொண்டிருந்த, அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சியினர், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால், ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், உடனடியாக பல்லக்காபாளையம் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
17-Jul-2025