பஞ்., தலைவர் வீட்டில் ஆடு திருட்டு
பஞ்., தலைவர் வீட்டில் ஆடு திருட்டுபள்ளிப்பாளையம், செப். 27-சமயசங்கிலி பஞ்., தலைவர் வீட்டில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் 50. இவர் சமயசங்கிலி பஞ்., தலைவராகவும் உள்ளார். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இரவில் தனது வீட்டின் அருகில் உள்ள, மாட்டு கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்து விடுவார்.நேற்று முன்தினம் இரவு நான்கு குட்டி ஆடுகள், ஒரு பெரிய ஆட்டை கொட்டைகையில் கட்டி விட்டி, இரவு துாங்க சென்றுள்ளார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு பஞ்., தலைவர் முருகேசன் பார்த்த போது பெரிய ஆட்டை காணவில்லை. மர்ம நபர்கள் கொட்டைகையில் புகுந்து திருடி சென்றுள்ளனர்.திருட்டு போன ஆட்டின் மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய். இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசில் திருட்டு போன ஆட்டை கண்டுபிடித்து தர வேண்டும் என, முருகேசன் புகார் கொடுத்துள்ளார்.