துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
மல்லசமுத்திரம்:நெருங்கி வரும் சட்டசபை தேர்தலையொட்டி, மக்கள் பயமின்றி ஓட்டளிக்க வேண்டும் என, நாடுமுழுவதும் துணை ராணுவ படையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர்.அதன்படி, நேற்று, மல்லசமுத்திரம் நாடார்தெரு தொடங்கி லட்-சுமிபுரம், மோரிமேடு, மெயின்ரோடு, நான்கு ரதவீதி, டாக்டர் சுப்ராயன்வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில், துணை ராணுவ படையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.மல்லசமுத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன், துணை ராணுவ இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.அதேபோல், எலச்சிபாளையத்தில் நடந்த பேரணியில் இன்ஸ்-பெக்டர் பாலாஜிரமணன் பங்கேற்றார்.