மேலும் செய்திகள்
வீட்டுமனை பட்டா கலெக்டர் ஆய்வு
06-Apr-2025
நாமக்கல்: ''ஆவணங்கள் சரியாக இருந்தால், நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தில், விரைவில் பட்டா வழங்கப்படும்,'' என, ஆய்வின் போது, கலெக்டர் உமா கூறினார்.தமிழக முதல்வர் ஸ்டாலின், நகர்ப்புற பகுதிகளில் நீண்ட நாட்களாக பட்டா ஏதுமின்றி, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழும் மக்களுக்கு, அவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக, அரசின் சில வரைமுறைகளுக்கு உட்பட்டு, பட்டா வழங்க அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வசந்தபுரத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள், நகர்ப்புற வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த நபர்களின் குடியிருப்புகளுக்கு, கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், குடியிருப்புவாசிகளிடம், நீண்ட ஆண்டுகளாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து உறுதி செய்தார்.அப்போது, ''ஆவணங்கள் சரியாக இருந்தால், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வீட்டுமனை வரன்முறைபடுத்தி, நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், விரைவில் பட்டா வழங்கப்படும்,'' என்றார்.
06-Apr-2025