பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, கவுண்டம்பாளையத்தில் விநாயகர், பட்டத்தரசி அம்மன், வெள்ளையம்மாள் கோவில் உள்ளது.இக்கோவில் திருப்பணிகள், சில ஆண்டுகளாக நடந்து வந்தது. திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு மங்கள இசையுடன் மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு ப.வேலுார், காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவு கோபுர கண் திறப்பு, கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு விநாயகர், பட்டத்தரசி அம்மன், வெள்ளையம்மாள், பொம்மையம்மாள் சமேத மதுரை வீரன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.