உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க மக்கள், மாணவர்கள் முன்வர வேண்டும்

மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க மக்கள், மாணவர்கள் முன்வர வேண்டும்

நாமக்கல்: 'மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க மாணவர்கள், பொது-மக்கள் முன்வர வேண்டும்' என கலெக்டர் துர்கா மூர்த்தி தெரி-வித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், பல்-வேறு காரணிகளால் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகி-றது. மேலும், காற்று மாசுபாடு, புவி வெப்ப உயர்வு, மழைநீர் வீணாதல், வெள்ளம் ஏற்படுதல், பறவைகள் இருப்பிடம் இழத்தல் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருகிறது. அதனால், கிராமப்புறங்களில் அதிகளவில் மரக்கன்றுகள் வளர்ப்பது இன்றியமை-யாத ஒன்று.தமிழக அரசின் முன்னோடி திட்டமான, 'பசுமை தமிழகம்' இயக்-கத்தின் மூலம், மொத்த நிலப்பரப்பளவில், 24 சதவீதம் உள்ள காடுகள் மற்றும் மரங்களின் அடர்த்தியை, 33 சதவீதமாக உயர்த்-துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.மேலும், தமிழகம் முழுவதும், ஒரு கோடி மரக்கன்றுகள் நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025-26ம் ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்.,களின் பொது இடங்கள், சாலையோரம், அரசு கட்டட வளாகங்கள், கனவு இல்லம் ஆகிய இடங்களில், 2 லட்சத்து, 19,000 மரக்கன்றுகள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணி-யாளர்கள் மூலம் நடவு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.கிராம பஞ்.,களில் நடப்படும் மரக்கன்றுகளை, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தத்தெடுத்து கொண்டு பராமரிக்க முன்வர வேண்டும். அதிகளவில் மரங்கள் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் கிராமப்புறங்-களில் மரக்கன்றுகள் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பொது-மக்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றை தத்தெடுத்து, முழுமையாக பாதுகாத்து வளர்க்க முன்-வர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !