இரவில் மர்ம நபர் நடமாட்டம் ஸ்ரீகார்டன் பகுதி மக்கள் அச்சம்
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, தாஜ் நகர் அடுத்த ஸ்ரீகார்டன் பகுதியில், சில மாதங்களாக மர்ம நபர்கள் இரவில் சுற்றித்திரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஸ்ரீ கார்டன் பகுதியில் புகுந்த மர்ம நபர்கள், ஒவ்வொரு வீடாக சென்று நோட்டமிட்டனர்.இந்த காட்சி, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ, நேற்று சமூக வலைதளத்தில் பரவியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசிலும் புகாரளித்தனர்.இதேபோல், அலமேடு பகுதியிலும், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் மூன்று பேர், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டை நோட்டமிட்டு சென்றுள்ளனர். இந்த வீடியோவும் பரவி வருகிறது. மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.