உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிலை எடுக்க வந்தவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்

சிலை எடுக்க வந்தவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்

ராசிபுரம், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் மோகன் மகன் மணிகண்டன், 21; இவரது நண்பர்கள், 8 பேர் சேர்ந்து, சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே விநாயகர் சிலை எடுப்பதற்காக, நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு மினி ஆட்டோவில் புறப்பட்டுள்ளனர். டிரைவர் ஹரி, 24, ஆட்டோவை ஓட்டினார்.ஆண்டகலுார் கேட் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த, 'ஈச்சர்' லாரி மோதியது. இதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மணிகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாலு மகன் அருண்மேத்தா, 19, சேகர் மகன் விஜயகுமார், 27, பொன்ராமன் மகன் சபரீசன், 16, ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மணிகண்டன் கொடுத்த புகார்படி, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான, தென்காசியை சேர்ந்த அல்போன்ஸ் மகன் பால்தினகரபாண்டியனிடம், 22, ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !