உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தார்ச்சாலை கேட்டு மின்னக்கல் மக்கள் மனு

தார்ச்சாலை கேட்டு மின்னக்கல் மக்கள் மனு

நாமக்கல், வெண்ணந்துார் அடுத்த மின்னக்கல் பகுதியில் ஜல்லி சாலையை, தார்ச்சாலையாக மாற்றித்தரக்கோரி, அப்பகுதி மக்கள் கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ராசிபுரம் தாலுகா, வெண்ணந்துார் ஒன்றியம், மின்னக்கல் கிராமத்தை சேர்ந்த நாங்கள், மின்னக்கல், ஆண்டிக்காடு அருந்ததியர் காலனி, கோடிக்காடு, கொட்டபுஞ்சை காடு, மதுக்கான்காடு வழியாக ஆட்டையாம்பட்டி-ராசிபுரம் சாலையை இணைக்கும் சாலைக்கு, இரண்டு முறை ஜல்லி சாலை அமைத்து, காலம் காலமாக சென்று வருகிறோம். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர்.இந்நிலையில், தனி நபர் ஒருவர் அவ்வழியாக செல்ல அனுமதி மறுத்தார். இதையடுத்து, ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார் விசாரணை நடத்தி, பாதையில் செல்ல வழிவகை செய்து கொடுத்தனர். இந்த ஜல்லி சாலையை, தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை