உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோவில் கட்ட இடம் கேட்டு மனு

கோவில் கட்ட இடம் கேட்டு மனு

நாமக்கல், நாமக்கல்லில் வழிபாட்டு தளம் அமைக்க இடம் ஒதுக்கீடு கேட்டு, கொண்டிசெட்டிப்பட்டி பகுதி மக்கள், கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், 'நாமக்கல் மாநகராட்சி, 39வது வார்டு, கொண்டிசெட்டிப்பட்டி கணபதி நகரில் வசித்து வருகிறோம். 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் எங்களுக்கு வழிபாட்டு தளம் இல்லாததால், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான அரசு நிலம் உள்ளது. அந்த இடத்தில் வழிபாட்டு தளம் அமைக்க இடம் ஒதுக்கித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை