ஹெச்.எம்., பதவி உயர்வு கவுன்சிலிங்கிற்கு பின் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த முதல்வருக்கு மனு
நாமக்கல்: 'மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு கவுன்-சிலிங் நடத்திய பின், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு பள்ளிக்கல்வித்-துறை சார்பில், 2025-26ம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கவுன்சிலிங் அட்டவணை வெளியிடப்பட்டுள்-ளது. இதில், மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்-பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சிலிங் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாற்றுத்திறனாளி ஆசிரி-யர்களுக்கு, 4 சதவீதம் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நீதி-மன்ற தீர்ப்பின் அடிப்படையில், மூத்த மாற்றுத்திறனாளி ஆசிரி-யர்களுக்கு, 4 சதவீத பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலை சேக-ரித்து, அதை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி முன்-னுரிமை பட்டியலில் இணைத்து, அதற்கு பின் மேல்நிலைப்-பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்-படும் என்று தெரிகிறது.அதே நேரத்தில், முதுகலை ஆசிரியர்களுக்கான உள் மாவட்ட, பொது மாறுதல் கவுன்சிலிங், வரும் ஜூலை, 3 அன்றும், வெளி-மாவட்ட கவுன்சிலிங், 4லும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்-டுள்ளது.இந்நிலையில், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்திய பின், முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்தினால், பதவி உயர்வில் செல்லக்கூடிய மூத்த முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றிய சில காலி பணியி-டங்கள், தங்களுக்கு கிடைக்கும் என்று காத்திருந்தனர்.ஆனால், தற்போது மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் தாமதமாகிறது. இதற்கிடையில், வரும் ஜூலை முதல் வாரமே, முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்-தாய்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, முதுகலை ஆசிரியர்களி-டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு நடத்தாமல் நடத்த உள்ள இந்த பொது மாறுதல் கவுன்சிலிங்கால், பெரிய அளவில் முதுகலை ஆசிரியர்களுக்கு நன்மை இல்லை. அவற்றை தமிழக அரசு முழு-மையாக அறிந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.