மேலும் செய்திகள்
புதிய வகுப்பறைகள் கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்
01-Jun-2025
குமாரபாளையம், குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, பள்ளி மேலாண்மைக்குழுவினர், கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.இதுகுறித்து, அந்த மனுவில் கூறியிருப்பதாவது: குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சென்ற கல்வியாண்டில், 34 வகுப்பறைகள் இருந்தன. தற்போது, 32 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இந்த கல்வியாண்டில், 1,670 மாணவியர் உள்ளதால், கூடுதலாக, 10 வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில், 556 மாணவியர் படித்து வருகின்றனர். எனவே, முதுநிலை ஆசிரியர்கள், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி பயிற்றுனர், தலா, ஒரு பணியிடம் தேவைப்படுகிறது. மேலும், பொருளியல் பணியிடம் காலியாக உள்ளது. எனவே, அந்த காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அடிப்படை வசதியான கழிப்பறை கட்டி தரவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
01-Jun-2025