உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தலைசிறந்த பொறியாளர்களை உருவாக்கும் பி.ஜி.பி., இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி

தலைசிறந்த பொறியாளர்களை உருவாக்கும் பி.ஜி.பி., இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி

நாமக்கல் நாமக்கல் பி.ஜி.பி., கல்லுாரி, 26 ஆண்டுகளுக்கு முன், தலைவர் பழனி ஜி பெரியசாமியால் நிறுவப்பட்டது. துணைத்தலைவராக விசாலாட்சி பெரியசாமி உள்ளார்.இக்கல்லுாரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், உலக அளவில் மிக உயர்ந்த பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இக்கல்லுாரியில், ஆய்வகம், வகுப்பறை, பயிற்சி பட்டறைகள் மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.பேராசிரியர்கள் அனைவரும், அனுபவம் வாய்ந்தவர்களாகவும், அர்ப்பணிப்போடும் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், தலைசிறந்த பொறியாளர்களை உருவாக்கி வருகின்றனர். மாணவர்களின் ஆளுமை, உழைப்பு மற்றும் பொதுச்சேவையை ஊக்குவிக்க, என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., - ஒய்.ஆர்.சி., - ஆர்.ஆர்.சி., போன்றவை உள்ளன. இக்கல்லுாரி, 'நாக்' தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. மாணவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்க, பாடங்களோடு இணைந்து பல மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள், வேலைசார்ந்த படிப்புகளும் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக, விளையாட்டு மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. விபரங்களுக்கு, 8939808574 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !