உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வளையப்பட்டி பகுதியில் பட்டா நிலத்தில் 20,000 பனை விதை நடவு

வளையப்பட்டி பகுதியில் பட்டா நிலத்தில் 20,000 பனை விதை நடவு

நாமக்கல்: வளையப்பட்டி பகுதியில், பட்டா நிலத்தில், 20,000 பனை விதை நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், விவ-சாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழகத்தில், மாநில மரமான, பரமாரிப்பில்லாமலே காலத்-துக்கும் பயன்தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் வகை-யிலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழக பசுமை இயக்கம் சார்பில், ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஐந்து கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல், பூம்புகார் வரை தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட, 8 மாவட்-டங்களில், காவிரிக்கரையின் இருபக்கங்களிலும், 416 கி.மீ., துாரத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது.நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களிலும், நீர்நிலைக-ளிலும் பனை விதைகள் நடும் பணி, கடந்த, நவ., முதல் வாரத்தில் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், வளையப்பட்டி பகுதியில் பட்டா நிலங்களில் பனை விதை நடவு செய்யும் பணி, நேற்று நடந்தது. விவசா-யிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பா-ளர்கள் ராம்குமார், பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பட்டா நிலங்களில், 20,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.இதுகுறித்து, விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தை, ஒரு ஆண்டுக்கு முன் துவங்கினோம். இதுவரை, 2.65 லட்சம் பனைவிதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, 20,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கரைபோட்டான் ஆற்றின் கரையோரம், ஏரிக்கரைகள் நீரோடை கரைகளில் அரசின் அனுமதி பெற்று பனை விதைகள் நடவு செய்ய உள்ளோம். தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்-ளதால், ராமநாதபுரத்தில், பனை விதை தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி