மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
25-May-2025
ராசிபுரம், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ராசிபுரம் நகராட்சி மற்றும் தனியார் பள்ளி சார்பில், நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை சேர்மன் கவிதா தொடங்கி வைத்தார். இதில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, சேலம் ரோடு, ஆத்துார் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்றது.ஊர்வலத்தில், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள், மஞ்சள் பையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தி சென்றனர். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக கோஷமிட்டு சென்றனர்.
25-May-2025