உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வழி தவறி வந்த பள்ளி மாணவனை மீட்ட போலீசார்

வழி தவறி வந்த பள்ளி மாணவனை மீட்ட போலீசார்

குமாரபாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவர் வழி தவறி, குமாரபாளையம் அருகே சுற்றித்திரிந்தவரை, போலீசார் மீட்டனர்.பள்ளிப்பாளையம் அருகே உள்ள, வெடியரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் லிங்கேஸ்வரன், வழி தவறி குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் பகுதியில் சுற்றித்திரிந்தார். மாணவனை அப்பகுதியை சேர்ந்த பூங்கொடி என்பவர், குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தார். மாணவனிடம் விசாரித்த இன்ஸ்பெக்டர் தவமணி, உடனடியாக பள்ளிப்பாளையம் போலீசாரை தொடர்பு கொண்டார். அப்போது மாணவனை காணவில்லை என, அவரது பெற்றோர் வளர்மதி, அர்த்தநாரி ஆகியோர் பள்ளிப்பாளையம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.இதையடுத்து குமாரபாளையம் போலீசார், பள்ளிப்பாளையம் போலீசாரிடம் மாணவனை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ