ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் பூஜை
மல்லசமுத்திரம், ஜன. 2-ஆங்கில புத்தாண்டையொட்டி, மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று காலை, 5:00 மணி முதல் மாலை வரை, மூலவருக்கு பல்வேறு மூலிகை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது.கோவில் உட்பிரகாரம், மூலவர் சன்னதியில் பலவகை மலர்கள், மயில் இறகால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வள்ளி, தெய்வானையுடன், மயில் இறகால் செய்யப்பட்ட கிரீடத்துடன் உற்சவர் முருகன் அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.*அதேபோல், மல்லசமுத்திரம் அடுத்த வையப்பமலை மலைக்குன்றின் மீதுள்ள சுப்ரமணிய சுவாமிக்கும், மலையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கணசித்தர் குகையிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.* பள்ளிப்பாளையம் அடுத்த ஒன்பதாம்படி பகுதியில் காவிரி பாலம் அருகே அன்னை புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.* குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. இதேபோல் கோட்டைமேடு காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜாவீதி சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோவில், நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.