உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் பிரத்யங்கிரா ஹோமம்

கொல்லிமலையில் பிரத்யங்கிரா ஹோமம்

சேந்தமங்கலம்: கொல்லிமலை, ஓசானி நகரில் மாணிக்க சித்தர் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி நாளில், சித்தர்களின் ஆசி பெறு-வதற்காக, பிரத்யங்கிரா ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்-படி, நேற்று முன்தினம் இரவு, பிரத்யங்கிரா ஹோமம் நடந்தது. முதலில் கணபதி ஹோமமும், முருகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.தொடர்ந்து, பிரத்யங்கிரா ஹோமம் நடந்தது. இந்த ஹோமத்தில், 20 கிலோ மிளகாய்களை கொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ