உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மழையில் வீணாகும் புத்தகம் குடை பிடித்து ஆர்ப்பாட்டம்

மழையில் வீணாகும் புத்தகம் குடை பிடித்து ஆர்ப்பாட்டம்

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி டவுன் பஞ்.,ல், 16,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். டவுன் பஞ்., மக்களுக்காக இப்பகுதியில் கிளை நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 20,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கிளை நுாலக கட்டடம், 56 ஆண்டு பழமையானது என்பதால் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால் மழை பெய்யும்போது, புத்தகங்கள் நனைந்து வீணாகின்றன. மேலும், படிக்க வரும் மாணவர்கள், வாசகர்கள் மீது கூரை இடிந்து விழும் அபாயம் உள்ளது. இது குறித்து பலமுறை வாசகர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், நுாலகத்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து, நேற்று கிளை நுாலகம் முன் மா.கம்யூ கட்சியினர் குடை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்தபடி நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகி கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி