உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காஸ் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஸ் விலை உயர்வு கண்டித்து ஆர்ப்பாட்டம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட, ராமாபுரம் பஸ் ஸ்டாப்பில், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், நேற்று மாலை, 6:30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மத்திய அரசு, சமையல் காஸ் விலையை, 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. மேலும், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி-யையும் அதிகரித்துள்ளது. இதனால், சிறு, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த விலையேற்றத்தை குறைக்க வேண்டும். அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும். நுாறு நாள் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி, 4,000 கோடி ரூபாயை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்-பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். ஒன்றிய செயலாளர் பாண்டியன், தலைவர் வரதராஜீ, மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ