மேலும் செய்திகள்
நாளை பள்ளிகள் திறப்பு புத்தகங்களும் வினியோகம்
01-Jun-2025
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையத்தில், மகரிஷி ஜோதிட சங்கம் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.பள்ளிப்பாளையம் அடுத்த தேவாங்கபுரம் பகுதியில், மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவக சங்கம் செயல்படுகிறது. சங்கத்தின், 73 வது மாதாந்திர சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம், திண்டுக்கல் சின்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான ஜோதிடர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், நான்காம் ஆண்டாக, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ், வாட்டர் பாட்டில் மற்றும் பேனா, பென்சில் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவக நிறுவன தலைவர் முகுந்தன்முரளி செய்திருந்தார்.
01-Jun-2025