2,299 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
2,299 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்மோகனுார், நவ. 27-'மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள, 2,299 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் உமா கூறினார்.மோகனுார் டவுன் பஞ்., ப.வேலுார் தாலுகா பகுதிகளில், 'நிறைந்தது மனம்' திட்டத்தில், 'ஊட்டச்சத்தை உறுதி செய்' ஊட்டச்சத்து பெட்டகங்களை பெற்ற தாய்மார்களிடம், அதன் பயன்பாடுகள் குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா கலந்துரையாடினார்.அப்போது, அவர் கூறியதாவது:ஆரோக்கியமான குழந்தைகளே, நாட்டின் வளமான எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க, 'ஊட்டச்சத்தை உறுதி செய்' என்ற புதிய திட்டத்தை தொடங்கினார்.இந்த திட்டம் மூலம் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில், 77.3 சதவீதம் குழந்தைகள், இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிறந்தது முதல், ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த முடியும்.நாமக்கல் மாவட்டத்தில், 2023-24ம் ஆண்டு முதல் கட்டத்தில், கடுமையான ஊட்டச்சத்து நிலையில் உள்ள, 1,018 குழந்தைகள், மிதமான ஊட்டச்சத்து நிலையில் உள்ள, 1,281 குழந்தைகள் என, மொத்தம், 2,299 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டத்தில், கடுமையான ஊட்டச்சத்து நிலையில் உள்ள, 1,874 குழந்தைகள், மிதமான ஊட்டச்சத்து நிலையில் உள்ள, 1,938 குழந்தைகள் என, மொத்தம், 3,812 குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.