உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விளையாட்டு குழுக்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

விளையாட்டு குழுக்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை மலையாளபட்டி கிராமத்தில், மை பாரத் திட்டத்தின் கீழ் விளையாட்டு குழுக்களுக்கு வாலிபால், கேரம்போர்டு, செஸ் போர்டு, கால்பந்து, இறகு பந்து ஆகிய விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு விளையாட்டுகளில் இப் பகுதி இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.எனவே, கிராமத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற கிராமங்களில் விளையாட்டு குழுக்கள் அமைப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.இதையடுத்து, பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவின் மாநில இணை அமைப்பாளர் லோகேந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை