உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நகராட்சி கமிஷனர், பொறியாளர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை

நகராட்சி கமிஷனர், பொறியாளர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சிக்கு கமிஷனர், பொறி-யாளர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.குமாரபாளையம் நகராட்சி தற்காலிக கமிஷன-ராக, திருச்செங்கோடு, ராசிபுரம் நகராட்சி கமிஷ-னர்கள் வந்துகொண்டிருந்தனர். தற்போது, சேலம் மாவட்டம், மேட்டூரிலிருந்து நித்யா என்பவர் பொறுப்பு கமிஷனராக வந்துகொண்டுள்ளார். குமாரபாளையத்தில், 33 வார்டுகள் உள்ளன. அதில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொது-மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், நிரந்தர கமிஷனர் இல்லாமல், பொறியாளர் ராஜேந்திரன், நகராட்சி பணிகளை நிர்வகித்து வந்தார். ஜூன் மாத இறுதியில் அவரும் பணி ஓய்வுபெற்றார்.இந்நிலையில், குடிநீர் வினியோகம், மேல்நிலை தொட்டி அமைத்தல், வடிகால் அமைத்தல், வரி வசூல் பணிகளை கவனித்தல், அரசு சார்பில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட பணிகளில் பங்கேற்க, நிரந்தர கமிஷனர், பொறி-யாளர் இல்லாமல் உள்ளது. 33 வார்டுகளில் பல இடங்களில், திட்டப்பணிகள் நிலுவையில் உள்-ளன. நகராட்சி வளர்ச்சியை கருத்தில்கொண்டு, விரைவில் நிரந்தர நகராட்சி கமிஷனர், பொறி-யாளர் நியமிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை