மேலும் செய்திகள்
கீழக்கிடாரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
13-Jun-2025
நாமக்கல், நாமக்கல் அடுத்த மிட்டா அணியார் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., நிகழ்ச்சியில் பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:இத்திட்டம் தமிழக முதல்வரின் கனவு திட்டமாகும். முகாமில், 14 அரசு துறைகளின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, இ.பட்டா, நத்தம் பட்டா மாறுதல் உத்தரவு, இலவச தையல் மிஷின்கள், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்டவை, 218 பயனாளிகளுக்கு, 81 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி, தங்கள் உடல்நலனையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார்.முன்னதாக அரசு துறைகளின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை எம்.பி., திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.ஆர்.டி.ஓ., சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
13-Jun-2025