உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 2 மணி நேரம் மின்தடை பொதுமக்கள் தவிப்பு

2 மணி நேரம் மின்தடை பொதுமக்கள் தவிப்பு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, காவிரி, பிரேம்நகர், கரட்டாங்காடு, வ.உ.சி., நகர் மற்றும் இதன் சுற்றுவட்டாரத்தில், நேற்று மதியம், 4:00 மணி முதல், 6:00 மணி வரை மின்தடை ஏற்பட்டது. திடீரென அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்களும், விசைத்தறி தொழிலாளர்களும் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய பணியாளர்கள் கூறுகையில், 'கரட்டாங்காடு பகுதியில் மின் கம்பம் சீரமைக்கும் பணி நடந்தது. இப்பணி முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்பட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ