உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதுச்சத்திரத்தில் மழை விவசாயிகள் நிம்மதி

புதுச்சத்திரத்தில் மழை விவசாயிகள் நிம்மதி

புதுச்சத்திரம், புதுச்சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 43 மி.மீ., மழை கொட்டியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.புதுச்சத்திரம் ஒன்றியத்தை சுற்றிலும், ஏராளமான சிறிய மலைப்பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை புதுச்சத்திரம், நவணி, பள்ளிப்பட்டி, திருமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. 43 மி.மீ., மழை பெய்ததால், பல்வேறு கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்கி நேற்று வரை நின்றிருந்தது. இதனால், இந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை