உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 2வது நாளாக தொடர்ந்த மழை மாவட்டத்தில் 126.20 மி.மீ., பதிவு

2வது நாளாக தொடர்ந்த மழை மாவட்டத்தில் 126.20 மி.மீ., பதிவு

நாமக்கல், தென்கிழக்கு அரபிக்கடலில், கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.இதனால், வடகிழக்கு பருவ மழை, தமிழக வட கடலோர மாவட்டங்களில் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், மதமான மழை மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் முதல், விட்டு விட்டு நாள் முழுவதும் சாரல் மழை பெய்தது. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்றும் சாரல் மழை நீடித்தது. அதனால், பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். மேலும், வெளியே வந்தவர்களும், குடையை பிடித்துக்கொண்டும், 'ரெயின் கோட்' அணிந்தும் சென்றனர். ஒரு சிலர் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. தொடர் மழையால், நாமக்கல் மாவட்டத்தில, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு, நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டார். கல்லுாரி கள் வழக்கம் போல் செயல்பட்டன. நேற்று முன்தினம் காலை, 6:00 மணி முதல், நேற்று அதிகாலை, 6:00 மணி வரை, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு வருமாறு(மி.மீ.,ல்):எருமப்பட்டி, 5, குமாரபாளையம், 3.80, மங்களபுரம், 32.20, மோகனுார், 16, நாமக்கல், 18, ப.வேலுார், 8, புதுச்சத்திரம், 5, ராசிபுரம், 7, சேந்தமங்கலம், 7, திருச்செங்கோடு, 4.20, கலெக்டர் அலுவலகம், 4, கொல்லிமலை, 16 என, 126.20 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி