பயிர்களை மூழ்கடித்த மழைநீர்: வரப்பை வெட்டி வெளியேற்றம்
சேந்தமங்கலம்: 'பெஞ்சல்' புயலால், நாமக்கல் கொல்லிமலையில் சில நாட்களாக மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பெரியாற்றில் வெள்-ளப்பெருக்கு ஏற்பட்டு, சேந்தமங்கலம், துத்திக்குளம் பகுதிகளில் உள்ள பொம்மசமுத்திரம், துத்திக்குளம் ஏரிகள் நிரம்பின.அதிலிருந்து வெளியேறிய உபரிநீர், அருகில் உள்ள கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட விளை நிலங்களில் புகுந்தது. இதனால், நுாற்-றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. நேற்று முன்தினம் முதல் கொல்லிமலையில் இருந்து வரும் தண்ணீரின் வரத்து குறைந்துள்ளதால், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் வயல்களில் பயிர்களை மூழ்கியபடி தேங்கியிருந்த தண்-ணீரை, விவசாயிகள் வரப்புகளை வெட்டி வெளியேற்றி வருகின்-றனர்.